2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மண்ணினுள் மூடுண்ட தொழிலாளி காப்பற்றப்பட்டார்

Super User   / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                  (சரண்யா)

எரிபொருள் தாங்கி அமைப்பதற்காக குழியொன்றை வெட்டிய நபர் மீது திடீரென  மண் சரிந்து வீழ்ந்ததில் மண்ணுள் புதையுண்டார். இவர் அருகிலிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று பளை பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கென பாரிய எரிபொருள் தாங்கி ஒன்றினை நிலத்தினுள் புதைப்பதற்காக குழி ஒன்றை தோண்டிக் கொண்டிருந்த புலோப்பளை மேற்கைச் சேர்ந்த 48 வயதான க.ஈசன் மீது திடீரென குழியின் மேற்புற மண் சரிந்து உட்புறமாக வீழ்ந்ததில் மண்ணினுள் மூடுண்டார்.

அதன்போது அருகிலிருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று மண்ணை அகற்றி, அதனுள் அகப்பட்டிருந்தவரை உயிருடன் மீட்டனர்.

மழை காரணமாக குறித்த குழியின் மண் ஈரமாக இருந்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழியினுளிருந்து மீட்கப்பட்டவர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .