2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

கடலில் நீந்தி கின்னஸ் சாதனையை நிலைநாட்டும் முயற்சியில் இளைஞன்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

 

                                                                (எஸ்.ஜெனி)

காலி, எல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதான சமன் உடுகமசூரிய என்பவர் நாட்டின் பல பாகங்களில் உள்ள கடற்கரைகளில் நீந்தி கின்னஸ் சாதனையை நிலை நாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி காலை கொழும்பு கடற்கரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து அம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணம், பூநகரி, ஆகிய பகுதிகளுக்கு கடல் மார்க்கமாக சென்று இன்று மாலை மன்னார் பிரதான பாலத்தை வந்தடைந்தார்.

இவரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலஸ்பிள்ளை மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டிமெல் ஆகியோர் வரவேற்றனர். இவர் சிலாபத்துரை கடல் மார்க்கத்தினூடாக புத்தளம், கற்பிட்டி, நீர்கொழும்பு சென்று கொழும்பை சென்றடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .