Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகக் கண்காட்சியின்போது மோதல்கள் இடம்பெற்று வந்ததைத் தொடர்ந்து குறித்த கண்காட்சி உயர் அதிகாரிகளினால் நேற்று சனிக்கிழமை மாலை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சு ஒன்றின் தலைமையின் கீழ் இலங்கை இளைஞர் பேரவையின் உதவியுடன் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் மன்/அல்-அஸ்ஹா நவோதைய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி இடம்பெற்று வந்தது.
மேற்படி வர்த்தகக் கண்காட்சியினை நடத்துவதற்கு அதிகளவான தென்பகுதி மக்களும் வருகை தந்திருந்தனர். இதன்போது நிகழ்வுகள் இடம்பெறும் மைதானம் மற்றும் வீதிகளில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சண்டையாக மாறி விடும் நிலைமை ஏற்பட்டது. நேற்று மன்னாரைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். பின் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மன்னார் அல்/அஸ்ஹர் ம.வி பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டனர். அதன் பின் நிகழ்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வர்த்தகக் கண்காட்சி குழுவினர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
57 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago