Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளிலும் சட்ட விரோதமான முறையில் மின்சாரத்தை பெற்ற நூற்றுக் கணக்கான குடியிருப்பாளர்களும் இன்று கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
அவ்விணைப்புகளில் இருந்து பிரதேச வாசிகள் மின்சாரத்தினை பெற்றுள்ளனர். இந்த நிலையில் திடீர் திடீரென கொழும்பில் இருந்து மின்சாரசபை அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து தேடுதல்களினை மேற்கொண்டு மேற்படி நபர்களை கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோத மின்பாவணையாளர்களுக்கு மன்னார் நீதி மன்றில் அபராதத் தொகையாக 10 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரை அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago