Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி இன்று கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான ஊதியம் பெறாத நிலையிலும் குறைந்தளவு ஊதியம் பெற்றும் 800 இற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கற்பித்தல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேறுமாவட்டங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் தமக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் இதன்போது ஆசிரியர்களுக்குத் தெரிவித்ததுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
3 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
24 Oct 2025