2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மன்னாரில் தனியார் பஸ் ஒன்று எரியூட்டப்பட்டது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் தோட்டவெளி புனித வேதசாட்சி ஆலயத்திற்கு முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று நேற்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரித்து நாசமாக்கப்பட்ட அந்த பஸ் அண்மைக்காலமாக மன்னாரில் இருந்து சிலாபத்துறை ஊடாக புத்தளம் பகுதிக்கு போக்குவரத்துச் சேவையினை மேற்கொண்டு வந்துள்ளதாகவும், சில தினங்களாக சேவையில் ஈடுபடாமல் அங்கேயே தரித்து நின்றுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் எதனால் ஏற்பட்டது என மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரியூட்டப்பட்ட பஸ், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த அல்பிரட் அன்டன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .