Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் மீள்குடியேறியுள்ள நிலையில் அங்குள்ள வெற்றுக்காணிகளை அங்கு மீள்குடியேறியுள்ள அரச அதிகாரி ஒருவர் அவருடைய உறவினர்களுக்கு எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
முசலிப் பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் நபர், அங்கு மீள்குடியேறியுள்ள நிலையில் மக்கள் மீள்குடியேறாத காணிகளை சட்டதிட்டங்களுக்கு புறம்பாக எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் குறித்த நபரிடம் கேட்டபோது, தன்னிடம் இது பற்றி யாரும் கேட்கக் கூடாது என தெரவித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக மாந்தை எள்ளுப்பிட்டி கிராம சேவகரிடம் கேட்டபோது இவ்விடயம் உண்மை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago