2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆண்டு விழா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் 17ஆவது ஆண்டு விழா கோலாகலமாக இன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் கொண்டாடப்பட்டது.

1993ஆம் ஆண்டு இதே மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கடந்த 17 ஆண்டு காலம் சுமார் மூவாயிரம் வரையிலான ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது என கல்லூரி பீடாதிபதி கே.பேனாட் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

மூவினத்தையும் சேர்ந்த மாணவர்கள்  தேசியரீதியில் உள்வாங்கப்பட்டு ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர் எனவும் அவர் சொன்னார்.

ஆரம்பகல்வி, உடற்கல்வி, விஞ்ஞானம் ஆகிய பயிற்சி நெறிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி இப்போது பத்து பயிற்சி நெறிகளையும் மும்மொழிகளிலும் நடத்தி வருவதாகவும் பீடாதிபதி குறிப்பிட்டார்.

என்ரிப் திட்டப் பணிப்பாளர் எஸ் சிவகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த வைபவத்தில் மூத்த கல்விமான்கள் எட்டுபேர் கௌரவிக்கப்பட்டனர். உள்ளக ஆசிரியர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .