2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குடிநீரின்றி அவதி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் தாம் தொடர்ந்தும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
 
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது குடம் ஒன்றிற்கு 2 ரூபா 50 சதம் அறவிடப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கிராமத்திற்கு அடம்பன் பிரதேச சபையின் ஏற்பாட்டில் விடத்தல்தீவு கிராமத்திற்கு நீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக அடம்பன் பிரதேச சபை செயலாளர் ஜெனிங்ஸனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை செய்ய வேண்டிய வேலைகளை மக்களின் நலனுக்காக அடம்பன் பிரதேச சபை செய்து வருவதாகவும் 2000 லீற்றர் நீருக்கு 300 ரூபாய் மட்டுமேஅறவிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .