2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வவுனியா விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு சத்திர சிகிச்சை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, மில் வீதியில் கடந்த நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வெடப்புச் சம்பவத்தின்போது காயமடைந்த இரு வர்த்தகர்களுக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு உள்ளே இரும்பு துண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. அதனை வெளியே எடுக்க சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளது.

சம்பவதினம் இரவு அந்த வீதியால் எமது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது மில் வீதியிலுள்ள சேவிஸ் நிலையத்திற்கு முன்னால் பாரிய வெடிப்பு இடம்பெற்றது.

அங்கு நின்றவர்கள் ஒட்டம் பிடித்தார்கள். எமது உடலிலிருந்து இரத்தம் வடிந்தது. மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு ஆட்டோவின் மூலம் வைத்தியசாலைக்கு வந்தோம்; என காயமடைந்த இருவரும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .