2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வவுனியா நகரசபைத் தலைவருக்கு எதிரான விசாரணை நிறைவு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா நகரசபைத் தலைவருக்கு எதிராக சபை உறுப்பினர்கள் தெரிவித்த முறைப்பாடு குறித்து ஆராயவென்று  வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருந்த  ஒய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ரி.விக்கினராசா தனிநபர் விசாரணைக் குழு   இன்றுடன் தனது விசாரணையினை நிறைவு செய்துள்ளது என நகரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரசபைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுகின்றார் என தெரிவித்து சபை உறுப்பினர்கள் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர். இந்நிலையில், முரண்பாடுகளை ஆராய்வதற்கு உள்ளுராட்சி சட்டங்களுக்கு அமைய விசாரணைக் குழு ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக் குழுவின் அறிக்கை மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தலைவர், உபதலைவர் மற்றும் சகல சபை உறுப்பினர்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதுடன், தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--