2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வவுனியா வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா மில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் மீது கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதான ஆறு வர்த்தகர்களும் நேற்று வியாழக்கிழமை மாலை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் எம்.சிற்றம்பலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீங்கு விளைவிக்க கூடிய வெடிபொருட்களை பயன்படுத்தியமையே இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வர்த்தகரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மற்றவர் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--