2020 நவம்பர் 25, புதன்கிழமை

சகவாழ்வு மன்றத்தின் உதவி நடவடிக்கைகளைப் பார்வையிட தலைமையக அதிகாரிகள் விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்ட பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தலைமையாகக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாழ்வாதார உதவிகளை சகவாழ்வு மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து நேரில் சென்று பார்வையிட்டு வருவதாக மன்னார் சகவாழ்வு  மன்றத்தின் இணைப்பாளர் எப்.எம்.டியுட்டர் தெரிவித்தார்.

வீட்டுத்தோட்டம். கோழி வளர்த்தல். கடை போன்ற உதவிகளைப் பெற்ற பயனாளிகளின் வேலைத்திட்டங்களே ஆராயப்பட்டு வருகின்றன.

இதன்போது சகவாழ்வு மன்றத்தின் இயக்குனர் ஜீவன் அமரசிங்கம், சகவாழ்வு மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் டி.எஸ்.பல்பொல மற்றும் சகவாழ்வுமன்ற அதிகாரி உமா ராஜலக்ஸ்மி, மன்னார் சகவாழ்வு மன்றத்தின் இணைப்பாளர் எப்.எம்.டியுட்டர் ஆகியோர் இணைந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--