Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜித்தன்)
வவுனியா பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டுக்கான கலை இலக்கிய விழா நாளை காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வவுனியா பிரதேச செயலரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான அ.சிவபாலசுந்தரம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரச அதிபர் ததிருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் கலந்து கொள்வார்.
கௌரவ விருந்தினர்களாக வவுனியா வடக்குப் பிரதேச செயலர் க.பரந்தாமன், வவுனியா நகரசபைச் செயலாளர் எஸ். எம். ஜி.நாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி. அச்சுதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் விசேடமாக 5 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மனிதாபிமான விருது
வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த சமயம் அவர்களின் கல்வி, சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற விடயங்களில் செயற்பட்டவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
வவுனியா தெற்கு கல்விப் பணிப்பாளர் திருமதி வி.ஆர்.ஏ. ஒஷ்வேள்ட், வைத்திய கலாநிதி சி. சுதாகரன், வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், சுதேச ஆயுர்வேத வைத்தியர் ஜனாக் முகம்மது அலிபார், முகம்மது சருபு ஆகியோர் இந்த விருதுகளைப் பெறவுள்ளனர்.
முத்தமிழ் கலைச்சுடர் விருது
ஆசிரியர் தமிழ்மணி அளகங்கன், கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன், நிருத்தியவாணி வீ. சூரியயாழினி, முல்லைமணி வே.சுப்பிரமணியம், தமிழருவி த.சிவகுமார், கலாபூசணம் இ.சிவசோதி, கலாபூசணம் சு.சண்முகவடிவேல், ஊடகவியலாளர் வீ.மாணிக்கவாசகம், பொன். தெய்வேந்திரம், கண்டாவளைக் கவிராஜர் கு.இராசையா ஆகியோர் இவ்விருதைப் பெறுகின்றனர்.
கலைச்சுடர் விருது
வினோசிறி – ஆலய கலைப்பணி, க.கனகேந்திரன் - சிற்பம், கனகரத்தினம் - சிற்பம், சு. மேகநாதன் - சிற்பம், ஜெனாப் செய்யுதீன் அப்து தமட் - மார்க்க சொற்பொழிவு, கலாபூசணம் கயல்வண்ணன் - இலக்கியம், வே. ஸ்ரீஸ்கந்தராஜா – நாட்டார் பாடல்.
சமூக அபிமானி விருது
திருமதி விஸ்வலிங்கம் பூபதி, திருமதி முஹமட் ஹலின் லூனா ஜெரீனா, திருமதி இராயப்பு கிறிஸ்ரின் மேரி, சீ.ஏ.இராமசுவாமி, வை. தேவராஜா, இ. கிருபாமூர்த்தி, தி. தில்லைநாதன், செ. பரமரட்ணம், எஸ். சிவப்பிரகாசம், திருமதி லிங்கேஸ்வரி, ஆ.நவரட்ணராஜா.
கலைஒளி விருது
ம. தைரியநாதன், இசைக்குயில் வதனி ஸ்ரீதரன், தவில் வித்துவான் நடேசன் கைலாயக்கம்பர், மிருதங்கக் கலைஞர் வை. சின்னராஜா, வட்டூர் கவிஞர் கதிர் சரவணபவன், கந்தப்பு ஜெயந்தன், பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம், மிருதங்கக் கலைஞர் க.கனகேஸ்வரன், தவில் வித்துவான் க. வீரச்சாமி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago