2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

'முசலி பிரதேச செயலக அதிகாரி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை'

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

முசலி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் அதிகாரி ஒருவரினால் சட்டவிரோதமான முறையில் காணிகள் அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் எதுவித உண்மையும் இல்லை என மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றினை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேலிடம் கொடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேலை தொடர்பு  கொண்டு கேட்ட போது,

கிராம மக்கள் கையெழுத்திட்ட மகஐர் கிடைத்துள்ளதாவும் குறித்த அதிகாரி தொடர்பாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--