2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மன்னாரில் சகல வசதிகளும் கொண்ட விளையாட்டுப் பிரிவு கட்டிடம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

மன்னாரில் 22 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகளும் கொண்டதான விளையாட்டு பிரிவு கட்டிட தொகுதி அமைக்கப்படுவதன் முதல் கட்டமாக எட்டு மில்லியன் ரூபாய் செலவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை திணைக்கள வடமாகாண பணிப்பாளர் சின்னதம்பி அண்ணாத்துரை தெரிவித்தார்

மன்னார் மாவட்ட கட்டிட திணைக்களம் இதற்கான வேலைகளை மேற்கொண்டுள்ளது. வடமாகாணசபை இதற்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் விரைவில் கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அமைக்கப்படவுள்ளது. கிளிநொச்சி நகரில் ரொட்டரிக்கழக விளையாட்டு மைதானத்திலும் முல்லைத்தீவில் மல்லாவி மத்திய மகாவித்தியாலயத்திலும் ஒவ்வொன்றும் தலா இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் இந்த மைதானங்கள் சகல வசதியும் கொண்டதாக அமைக்கப்படும் எனவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--