2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் வீதி நிர்மாணப் பணிகள்  இன்று வன்னியில் ஆரம்பிக்கப்பட்டன.

முல்லைத்தீவு–கொக்கிளாய்-புல்மோட்டை வீதியும், ஓட்டிசுட்டான்- நெடுங்கேணி வீதியும், முல்லைத்தீவு –புளியங்குளம் ஆகிய வீதிகளின் புனரமைப்பு வேலைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த வீதிகள் 30 மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .