2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க கப்பம் கோரியவர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருகின்றோமெனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் கிளிநொச்சியில் கப்பம் கோரியமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதானவர்கள் நால்வரும் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.

அவர்களை மீண்டும் இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, முழுமையான  விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கைதானவர்களில் மூவர் ஆனந்தபுரத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .