2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சேதமடைந்த நிலையில் இயங்கும் பளை - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

போரினால் சேதமடைந்த நிலையிலேயே பளை - பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது. கட்டிடத்தின் மேற் தளம் உட்பட பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது. எனினும் இந்தக் கட்டிடத்தொகுதியிலேயே மக்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதேவேளை இந்தக் கட்டிடத்தைப் புனரமைக்கும்வரையில் இந்தப் பணிமனையை தற்காலிகமாக இடம்மாற்றி வைப்பதற்கும் பளைப்பகுதியில் பொருத்தமான வேறு கட்டிடங்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. யுத்தத்தினால் பளை பிரதேசத்தின் முக்கியமான கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன.

எனவேதான் மாற்று வழியின்றி இந்தச் சேதமடைந்த கட்டிடத்தொகுதியில் பிரதேச செயலர் பணிமனையின் கடமைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தக் கட்டிடம் 2003ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தைப் புனரமைப்பதற்கு ஏறக்குறைய 20 மில்லியன் ரூபாய்கள் வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .