A.P.Mathan / 2010 நவம்பர் 17 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
மன்னார் மற்றும் குருநகர்ப்பகுதி மீனவர்களின் நடவடிக்கைகளால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக வலைப்பாடு, நாச்சிக்குடா மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார் மற்றும் குருநகர்ப்பகுதி மீனவர்கள் பெரிய இழுவைப்படகுகளில் வந்து மீன் பிடிப்பதனால், வலைப்பாடு மற்றும் நாச்சிக்குடா மீனவர்களின் வலைகள் சேதமடைவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பல தடவைகள் சம்மந்தப்பட்ட இரண்டு பகுதியிலுள்ள மீனவர் சங்கங்களுடன் பேசி முடிவு செய்யப்பட்ட போதும், உடன்பாட்டை மீறி வெளி மீனவர்களின் தொல்லைகள் தமக்குத் தொடர்ந்து கொண்டிருப்பதாக இந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
நாச்சிக்குடா மற்றும் வலைப்பாட்டுக் கடலில் பெரிய படகுகளில் மீன்பிடி செய்வது பொருத்தமில்லை. அது சிறுபரவைக்கடல் ஆகையால்இ இழுவைப்படகுகளை அந்தப் பகுதியில் அனுமதிக்கக்கூடாது என கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. என்றபோதும் அந்த அறிவிப்பையும் மீறி இந்த வெளி மீனவர்களின் தலையீடுகளும் அத்து மீறல்களும் தொடர்ந்து கொண்டிருப்பதாக வலைப்பாடு மீனவர் சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
12 minute ago
17 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
57 minute ago
1 hours ago