Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் உயர்தர மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளில் அநாவசியமாக புகைப்படம், வீடியோக்காட்சிகளை பதிவுசெய்து பார்வையிடுவதாகத் தெரிவித்த மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஆபேல் றெவ்வல, இச்செயல்பாட்டால் மாணவர்களின் வாழ்க்கை சீர்கெடுமென கவலை வெளியிட்டார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மன்னார் மாவட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மாணவர்கள் தேவையற்ற புகைப்படம், வீடியோக்காட்சிகளை தொலைபேசியில் பதிவுசெய்து பார்வையிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனினும், மாணவர்கள் மீது பெற்றோர் அக்கறையாக இருக்க வேண்டும். இவ்வாறானவை தொடரும் பட்சத்தில் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்துவிடும் என்றார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago