Menaka Mookandi / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில நடைபெற்றது.
அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்த நிலைமைகள் பற்றியும் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவிகள குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும் தங்கியிருக்கும் 2,903 குடும்பங்களுக்கான சமைத்த உணவு மற்றும் இந்த மக்களுக்கான அவசர உதவிகளை வழங்குதல் பற்றியும் தொற்று நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் பளை, பூநகரி பிரதேச செயலர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மாவட்ட வைத்திய அதிகாரிகள், படை அதிகாரிகள, கூட்டுறவுச் சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள், விவசாயம், கமத்தொழில், கல்வி, நீர்ப்பாசனம், நீர்விநியோகம் ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட திட்டமிடற் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கம், யுனிசெவ், யுனொப்ஸ், யு.என்.டி.பி, அம்கோர், ஒச்சா, சோஆ, சிறுவர் பாதுகாப்பு நிதியம், சேவாலங்கா, எம்.எஸ்.எவ், டி.ஆர்.சி ஆகிய தொண்டர் அமைப்புகள் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
7 hours ago
9 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 Nov 2025