2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

விஞ்ஞானதினமான இன்று தொழில்நுட்ப அமைச்சின் விதாதா வவுனியா மாவட்ட வள நிலையத்தின் ஏற்பாட்டில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட  விஞ்ஞான தொழில்நுட்ப கண்காட்சியினை மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்துவைத்தார்.

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பௌதீக மற்றும் உயிரியில்த்துறை பீடத்தினரின் தொழில்நுட்ப கண்காட்சிகள் முக்கிய இடத்தினை வகித்திருந்தது.

பாடசாலை உயர்தரவகுப்பு  மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புக்களும்  காட்சிக்கு வைக்கப்பட்டன.  பெருமளவிலான மாணவர்கள் கண்காட்சியினை பார்வையிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--