Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி -விவேகராசா)
பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக இப்பிரிவுக்கு பொறுப்பான விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் தவறான கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். பெண்கள் அதிகளவில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர.; அவர்கள்; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தமக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர்.
இவர்களை விசாரணை செய்யும்போது அவர்களிடம் சட்டரீதியிலான திருமண பதிவு இல்லாது உள்ளமை தெரியவருகின்றது.
இது இவ்வாறிருக்க, இப்போது அதிகரித்துள்ள கைத்தொலைபேசி பாவனையால் பலருடைய வாழ்கை சீரழிந்துள்ளதாக சிறுவர் பராமரிப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .