2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யுத்தத்தில் கைவிட்ட வீட்டுப்பாவணை பொருட்களை கையளிக்க புதிய ஒழுங்கு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் இறுதிக் காலத்தில் கைவிடப்பட்ட வீட்டுப் பாவணைப் பொருட்களை உரியவர்கள் பெற்றுக்கொள்ள புதிய ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அறிவித்துள்ளார்.

தற்போது புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுரம், இரணைப்பாலை கிராம சேவையாளர் பிரிவு மக்களின் உடைமைகளே இவ்வாறு கையளிக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது பொருட்களின் விபரங்களைப் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபருக்கு வழங்கி அவரின் ஏற்பாட்டில் அறிவிக்கப்படும் தினங்களில் பொருட்களை எடுத்துச் செல்லலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .