Menaka Mookandi / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா, குருமண்காட்டைச் சேர்ந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்படி யுவதியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்றுக் காலை வேலைக்கு சென்ற குறித்த யுவதி இதுவரையில் வீடு திரும்பவில்லை என்று பெற்று தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
குருமண்காடு பிரதேசத்தை சேர்ந்த ஜெயசீலன் ஜெயபிரவீனா (வயது 25) என்ற யுவதியே இவ்வாறு காணாமல் பொனவராவார். இவர் வவுனியா மாவட்ட செயலகத்தின் கணக்கு பிரிவில் உதவியாளராக கடமைபுரிந்து வருகிறார்.
வழமைபோல் நேற்றுக் காலையும் வேலைக்குச் செல்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்ற போதிலும் தொழில்புரியும் இடத்தை அவர் சேரவில்லை என்று செயலகத்திலிருந்து தொலைபேசி மூலம் தமக்கு தகவல் கிடைத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். சேமமடுவை சேர்ந்த இவர் பெற்றோருடன் நீண்டகாலமாக வவுனியா குருமண்காட்டில் வசித்துவருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026