Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 09 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான் என அழைக்கப்படும் அந்தோனி இராயப்பு (வயது 40) கடந்த 18.08.2009இல் முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லையெனவும் அவரது மனைவி ஆர்.விரோனியா கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
யுத்தம் காரணமாக கடந்த 16.08.2009இல் முள்ளிவாய்க்காலிருந்து முல்லைத்தீவு நோக்கி எனது கணவருடன் நானும் 3 பிள்ளைகளும் வந்தபோது, சனநெரிசலில் எனது கணவரை தவறவிட்டேன்.
இருப்பினும் 17.08.2009இல் தங்களது இருப்பிடம் தேடி எனது கணவர் வந்தடைந்தார். கடந்த 18.08.2009இல் கத்தோலிக்க அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் எனது கணவரும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான இளம்பருதி, வேலவன், பாபு, ஈழவன், ரூபன், குமரன் ஆகியோர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.
இவர்கள் சரணடைவதை நான் நேரில் பார்த்தேன். சரணடைந்த இவர்கள் பஸ் ஒன்றில் ஏற்றப்பட்டார்கள். இதன் பின்னர் அவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவலும் இல்லை என்றார். எனது கணவரை மீட்டுத் தருமாறும் அந்தோனி இராயப்புவின் மனைவி கோரிக்கை விடுத்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago