2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மன்னார் அரச அதிபராக வேதநாயகம் நியமனம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் தனது கடமையினை பொருப்பேற்றுள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கடமையாற்றிவந்த ஏ.நிக்கொலாஸ் பிள்ளை கடந்த 6ஆம் திகதியன்று திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கொழும்பு பொது நிர்வாக அமைச்சிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக முல்லைத்தீவு அரச அதிபராக கடமையாற்றி வந்த வேதநாயகம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் இன்று தனது கடமையினை பொறுப்பேற்றார்.

இதேவேளை, முல்லைத்தீவு அதிபராக தற்போது மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய ஏ.பத்திநாதனும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .