2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மன்னாரில் புதிய கடைத்தொகுதி; அமைச்சர் றிஷாட் பதியுதீன் விஜயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பஸார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளை அகற்றி நவீனமான முறையில் கடைத்தொகுதிகளை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கடைத் தொகுதிகளைப் பார்வையிடுவதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துரை அமைச்சர் றிஸாட் பதியுதீன் அப்பகுதிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்தார்.

இந்நிலையில், மன்னார் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்ட அமைச்சர், 'பொலிஸ் நிலையம், மன்னார் அரச, தனியார் பேருந்து தரிப்பிடங்களையும் நவீன முறையில் அமைக்கவுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.வேதநாயகம், மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல், அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் நகர சபையின் செயலாளர் எஸ்.எஸ்.மேர்வின் குருஸ் ஆகியோரும் இணைந்து அமைச்சருடன் ஒதுக்கப்பட்ட இடங்களையும், கடைத்தொகுதியினையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .