2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மன்னாரில் வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்தில் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதிகளில் உள்ள வீடு மற்றும் வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அக்கிராமத்தினைச் சேர்ந்த 210 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.வேதநாயகம் தெரிவித்தார்.

இதனால் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 806 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் மேற்படி கிராம மக்கள் குறித்த கிராமத்தினை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளதாகவும் இவர்களுக்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தம்பனைக் குளத்தில் 200 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளதோடு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அருவியாற்று நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் பாலியாற்று பகுதியினைச் சேர்ந்த 25 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க உரிய அதிகாரிகளை தான் பணித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.வேதநாயம் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--