Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கும் தமிழ் சமூகத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையென தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீன், தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் செயற்பாடுளுக்கு தமது மாவட்டத்தில் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
மன்னார் மாவட்டததில் முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு உபகரணங்கள் கையளிப்பு மற்றும் புதிய பாடசாலைக் கட்டிடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், 'முஸ்லிம்கள் அகதிகளான போது கண்ணீர் விட்டவர்கள் தமிழ் மக்கள். அவர்கள் எம்முடன் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்கள்.
எமது சொத்துக்கள் பலவற்றை பாதுகாப்பாக எம்மிடம் ஒப்படைத்தவர்கள். நாம் அகதி முகாமில் இருந்த போது எம்மை வந்து பார்த்தவர்கள். எமது வெளியேற்றத்தின் பின்னனி பயங்கரவாதிகள் என்பதை யாவரும் அறிவர்.
வன்னி மாவட்டம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை கொண்டுள்ள முக்கிய மாவட்டமாகும். சில தனிப்பட்டவர்களது பிரச்சினைகளை கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சிரனைகள் உருவாக்குவது எவ்விதத்திலும் நியாயமற்றது.
தற்போது முஸ்லிம்கள் மீண்டும் 20 வருடங்களுக்கு பின்னர் தமது சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறி வருகின்றனர். அவர்களுக்கான உதவிகளை பிரதேச செயலாளர் முதல் கிராம அதிகாரி வரையிலுமான அரச அதிகாரிகள் செய்து கொடுக்கின்றனர்.
அது தான் உணர்வாகும். நான் இனவாதியல்ல. என்னிடம் குறுகிய சி்ந்தனைகள் இல்லை. எனது மாவட்ட மக்கள் எவராக இருந்தாலும் அவர்களது தேவைகளை செய்து கொடுப்பவன்' என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
8 minute ago
46 minute ago
Mohamed Thursday, 13 January 2011 11:28 PM
தனது கட்சியின் பெயரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று பெயர் மாற்றி அதில் அனைத்து சமூகங்களையும் அதில் பங்குபற்ற வைக்க வேண்டும் என்பதற்காக பழையவற்றை மறப்பது அழகல்ல ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
46 minute ago