2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மன்னார் தம்பனைக்குளம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், மதவாச்சி பிரதான வீதியின் தம்பனைக்குளம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் தங்களின் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இணைப்பாளர் முகமட் றியாஸ் தெரிவித்தார்.
 
அனுராதபுரம் மற்றும் வடமேல் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர் தேங்கி நின்று பினனர் அருவியாற்றினூடாக குறித்த தம்பனைக்குளம் கிராமப்பகுதியினை வந்தடைந்துள்ளது.

இதன் காரணமாக தம்பனைக்குளம் கிராமத்தில் உள்ள 531 குடும்பங்களைச் சேர்ந்த 1300 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் அம்மக்கள்  பாடாசாலையிலும்இ பொதுக்கட்டிடங்களிலும்இ தேவாலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும்இ பொதுக்கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மன்னார் ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறித்த தம்பனைக்குளம் கிராம் முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளமையினால் அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்டம் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X