2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் டைனமெட் வெடி பயன்படுத்திய மீனவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பள்ளிமுனைக் கடற்பரப்பில் நேற்று தொழிலுக்குச் சென்ற அப்பகுதி மீனவர்கள் சுமார் 500 கிலோ கிராம் எடை கொண்ட மீன்களை கரைக்கு கொண்டுவந்த போது தடைசெய்யப்பட்ட டைனமெட் வெடி மூலம் பிடித்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் கடற்படையினரால் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் கடற்தொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து கடற்தொழில் பரிசோதகர்கள் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பிடிக்கப்பட்ட மீன்களும் மன்னார் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட நீதிபதி மீனவர்கள் ஒவ்வெருவரும் தலா25 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இன்று மன்னார் கடற்தொழில் பரிசோதகர்கள் பிடிக்கப்பட்ட மீன்களின் சிலவற்றை பரிசோதனை செய்வதற்காக கொழும்பில் உள்ள'நாறா'நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .