Kogilavani / 2011 ஜனவரி 21 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)
பல தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வைரவப்புளியங்குளத்தில் உள்ள புளொட்டின் தலைமையகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஆகியன ஓரணியாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலின் பின்னர் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஏற்பாடு செய்த மதிய உணவு விருந்துபாசரத்திலும் மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
51 minute ago