Menaka Mookandi / 2011 ஜனவரி 25 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா, மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குரிய வேட்பு மனுக்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளை மறுதினம் வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் தெரிவித்தார்.
இன்று செவ்வாய் வவுனியாவில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் இறுதிக்கட்ட பணியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். சிறிலங்கா சுதந்திர கட்சி பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர். ஈ.பி.டி.பி.யும் இவர்களுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதேவேளை, ரெலோ அமைப்பு இந்த தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை நாளை புதன்கிழமை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.உதயராசா கூறினார்.
39 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago