Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் அச்சமற்ற சூழலை தோற்றுவித்து இம்மக்களுக்கான விமோசனத் திட்டங்களை முன்னெடுத்து வருவது ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமேயென தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலமே இம்மக்களுக்கான அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் கூறினார்.
முல்லைத்தீவு கலைமகள் பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த 30 வருடகால யுத்தத்தால், எமது வன்னி மாவட்டம் பெரிதும் இழப்புக்களை சந்தித்திருந்தது. அதிலிருந்து விடுபட்டு தற்போது அபிவிருத்தியின் வசந்தத்தை அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. இத்தருணத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களது வாக்குகளை மையமாக கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் குறித்து எமது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில முதன்முறையாக அபிவிருத்திக்குழுக் கூட்டம் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. அப்போது நாம் அவதானித்த விடயம் தான் இப்பிரதேசத்தின் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டமை. பாதை, மின்சாரம், போக்குவரத்து, கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துரிதமாக மேற்கொள்வதற்கான பணிப்புரை வழங்கப்பட்டது.
இதனை நடைமுறைக்கு கொண்டுவர ஆளும் கட்சியக்ல் மட்டும் தான் முடியும். நாம் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் இருக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசுவதன் மூலம் தான் முடியும் என்ற நம்பிக்கை தற்போது முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது. அதனால் தான் வெற்றிலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது தான் காலத்தின் சரியான தீர்மானம்.
இதை விடுத்து வேறு கட்சிகளுக்கு எமது வாக்குகளை அளிப்போமெனில் மீண்டும் நாம் அபிவிருத்தியில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.
கரைதுரைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம் பிரதேசத்தில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10 minute ago
15 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
42 minute ago