2025 ஜூலை 12, சனிக்கிழமை

மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடைவெளியினை ஏற்படுத்த சில தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் முயற்சி

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் ரஹ்மதுல்லா)

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நீண்டதொரு இடைவெளியினை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் சில தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுவது அநியாயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள், தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கின்றார்கள் என்பதை சர்வதேசத்துக்கு தெரிவிப்பதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த போகின்றனர் என அவர் கூறினார்.

முலைத்தீவு மாவட்டத்தில் பாலியாறு, பூவரசங்குளம், நெட்டான்கண்டல், அம்பாள்புரம், ஒட்டறுத்தகுளம், பாலப்பானி, வன்னி விலாங்குளம் மற்றும் விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியாக இலங்கை புலம்பெயர் தமிழ் மக்களை தங்க வைத்துக் கொண்டு தமது அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளின்; பின்னால் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.

ஆனால் இலங்கையில் வாழும் இவர்களது உறவுகள் உண்மையை நன்கறிந்து கொண்டனர். அதனால் கடந்த தேர்தல்களிலும் பார்க்கிலும் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் வெற்றிலை சின்னத்ததை ஆதரிப்பதற்கு ஒன்றுபட்டுள்ளர். இதன் மூலம், துரித மீள்குடியேற்றம், பிரதேச அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் அதனை முன்னெடுத்தல, கிராமங்களின் அபிவிருத்திக்கான தலைமைத்துவம் என்பவைகளில் மக்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .