2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கல்லாறு மீனவர்கள் தொழில் புரிவது தொடர்பாக கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்லாறு கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதிலுள்ள நடைமுறை பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான கலந்துரையாடலொன்று ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான சந்திரகுமாருக்கும் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மார்க்கிற்கும் இடையில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில், நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தலைமை அலுவலகத்தில இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இம்மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற பிரதேசங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாலேயே தொழில் புரிவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் இருப்பினும் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கண்ணிவெடிகளை அகற்றியமைக்கான உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் பட்சத்தில் கல்லாறு மக்களை தொழிலுக்கு செல்ல  அனுமதிப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனவும் முல்லைத்தீவு இராணுவத் தளபதி தெரிவித்தார்.  அம்மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நன்கு அறிவதாகவும் இச்சந்திப்பின்போது அவர் கூறினார்.

இதனையடுத்து, எதிர்வரும் வாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மேஜர் ஜெனரல் மார்க்கின் சார்பில் இராணுவ அதிகாரி மற்றும் யு.என்.டி.பி.யின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் ஆகியோருடன் குறித்த இடத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், இதன் பின்னர் கல்லாறு மக்கள் விரைவில் தொழிலில் ஈடுபடுவதற்கான நிலைமை உருவாக்கப்படுமென சந்திரகுமார் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--