2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லை மாவட்ட மக்களுக்கு வீடமைப்பு கொடுப்பனவு

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்சாத் றஹ்மத்துல்லா)

கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைதீவு மாவட்ட மக்களுக்கான முதற்கட்ட வீடமைப்பு கொடுப்பனவு இன்று சனிக்கிழமை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீனினால் வழங்கிவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு விஸ்வமடு மஹா வித்தியாலயத்தில் வைத்து இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
முதற்கட்ட கொடுப்பனவாக 500 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்கிவைக்கப்ட்டது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--