2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க முயற்சி: மாவை சேனாதிராசா எம்.பி.

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் தமிழ்த் ;தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு பல முயற்சிகள் மறைமுகமாக நடைபெறுவதாக தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வருகின்ற ஒளிக்கீற்ரை பிடித்துக்கொண்டு எங்களுடைய இலக்கை நோக்கி நாம் முன்னேற வேண்மெனவும் கூறினார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரிவு, வவுனியா வடக்கு, வெங்கல செட்டிகுளம் பிரதேசசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட வைபவம் நேற்று சனிக்கிழமை வவுனியா நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் நடைபெற்றது.  இதில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்குள்ள மிகப் பெரிய பலம் வாக்கு. இதனை கடந்தகால தேர்தலில் மக்கள் சரியாக பயன்படுத்தவில்லை. அரசாங்கம் எங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. அதில் முன்னேற்றம் உள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவாக கூறமுடியாது. சில  விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
மேற்குலக நாடுகளுடைய அழுத்தம் காரணமாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

தேர்தலின் பின்னர் பிரதேசசபைகளுக்கு தவிசாளர்களை நியமிப்பது பற்றி அவர் குறிப்பிடும்போது வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படுவதுடன், சபையை நிர்வகிக்க கூடிய ஆளுமை கொண்டவர்கள் தேவை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--