Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி--விவேகராசா)
தடுப்புக்காவலில் உள்ளவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்களை வவுனியாவிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவில் பார்வையிடலாமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அங்கு சென்றபோது ஏமாற்றமே கிடைத்துள்ளது. இது பற்றி அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம். அரசாங்கத்துடன் நாம் நடத்தவுள்ள அடுத்த சுற்றுப் பேச்சின்போது இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளோமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இறுதிகட்ட போரின் பின்னர் 13 ஆயிரம் பேர் சரணடைந்திருந்தனர.; இவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலைகளில் 15 வருடங்களாகவும் பலர் விசாரணைகளின்றி உள்ளனர். இவர்களை விடுவியுங்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டுவாருங்களென நாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது கேட்டுள்ளோம்.
அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுக்கள் குறித்து நாம் அவ்வப்போது இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்து வருகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .