2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மடு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு சீருடை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

லண்டனில் இயங்கும் தொண்டு நிறுவனமான 'லடர் யு.கே; அமைப்பினால் வடபகுதி மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு தொகை பாடசாலைச்  சீருடைகள் வழங்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், ஈ.சரவணபவன் ஆகியோரின் வேண்டுகோளுக்கமையவே மேற்படி அமைப்பினால் பாடசாலைச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிலையில், மன்னார் மடுக்கல்வி வலயத்திலுள்ள இரணை இலுப்பைக்குளம் அ.த.க.பாடசாலை, விளாத்திக்குளம், முள்ளிக்குளம், வலயன்கட்டு, பாலம்பிட்டி அ.த.க.ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 500  மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடைப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இரணை இலுப்பைக்குளம் அ.த.க.பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் இராசநயகத்தின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், லண்டன் லடர் யு.கே.அமைப்பின் பணிப்பாளர் மரியதாஸ், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.

லடர் யு.கே.அமைப்பானது யுத்தத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களினுடைய கல்வி வளர்ச்சியில் தன்னாலான பங்களிப்பைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .