2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார்

Menaka Mookandi   / 2011 ஜூன் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவு ஈடுபட்டுள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அக்கராயன் மற்றும் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக மண் அகழ்ந்து சென்ற ஐந்து உழவு இயந்திரங்களைப் பொலிஸார் கைப்பற்றினர்.

பின்னர் இந்த ஐந்து உழவு இயந்திரங்களும் மண் ஏற்றப்பட்ட நிலையில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதேவேளை சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாகனங்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் வழக்கையடுத்து அங்கே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .