2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இலங்கையிலேயே அதிக நீளமான கண்ணிவெடி அபாயப் பிரதேசம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 08 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

இலங்கையிலேயே மிக நீளமான கண்ணிவெடி அபாயப்பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திலுள்ள முகமாலை - கிளாலி - நாகர் கோவில் பிரதேசம் உள்ளதென கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த போர்க்காலத்தில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலிருந்த முன்னரண் பகுதியில் இந்தக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை அகற்றுவதற்கு நீண்டகாலப்பகுதி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கூடிய விரைவில் இந்தக் கண்ணிவெடிகளை அகற்றி மீள் குடியேற்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உரிய தரப்பினர்களுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X