Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 11 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
( ரி-விவேகராசா)
வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் கடந்த யுத்த சூழலில் சேதமடைந்த அனைத்து கூட்டுறவுச்சங்க கட்டிடங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி-ஏ சந்திரசிறி தெரிவித்தார்.
கூட்டுறவுக்கடைகள் இலாபம் பெறுவது முக்கியம் அல்ல மக்களுக்கு நல்ல சேவையாற்ற வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
வடபகுதி கூட்டுறவுச்சங்கங்கள் அத்தியாவசிய பொருட்களை மொத்தவிலையில் கொள்முதல் செய்யக்கூடிய மத்திய நிலையத்தை இன்று வவுனியாவில் திறந்துவைத்து பேசியபோது இவ்வாறு கூறினார்.
ஆளுநர் தொடர்ந்தும் பேசுகையில்- அரசாங்கம் கூ;ட்டுறவு அபிவிருத்தி தொடர்பாக சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
வடமாகாண சங்கங்களுடைய தேவைகருத்தி இந்த வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கடந்த 25 ஆண்டுகளாக அசாதாரண நிலை தோன்றிய காலத்தில் கூட்டுறவுச்சங்கங்கள் இயங்கியபோதிலும் முன்னேற்றம் இருக்கவில்லை ஆனால் இப்போது அபிவிருத்தி கண்டு வருவதினை நாம் காணுகின்றோம்.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை அபிவிருத்திக்கு தேவையான நிதியும் வளங்களும் வழங்கப்படுகின்றது.
இப்போது யாழ்;ப்பாணத்தில் 20 சங்கங்கள் நல்ல இலாபத்தில் இயங்குகின்றது. அதேபோன்று வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் சங்கங்கள் நல்லமுறையில் செயல்படுவதினை அறிய கூடியதாகவுள்ளது எனவும் ஆளுநர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
01 Jul 2025