2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வட மாகாண தமிழ் மொழித் தின இசை நாடகப் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் முதலிடம்

A.P.Mathan   / 2011 ஜூன் 11 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட தமிழ் மொழித் தின இசை நாடகப் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட இசை நாடகப் போட்டியில் முதலாம் இடத்தைக் கிளிநொச்சி மகா வித்தியாலயம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இந்தப் போட்டியில் தெரிவாகிய நாடகம் ஹரிச்சந்திர மயான காண்டம் என்ற புராண இசை நாடகமாகும்.

இதேவேளை கிளிநொச்சி மகா வித்தியாலயம், கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய மட்டத்திலான கலைத்திறன் - நாடகப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று ஜனாதிபதி விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .