2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஆனையிறவு உப்பளத்தை மீள இயக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

ஆனையிறவு உப்பளத்தை விரைவாக இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அங்குள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்று பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உப்பளத்தை இயக்குவதற்கு வசதியாக அங்குள்ள சேதமடைந்த கட்டிடங்களைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனையிறவு - குறிஞ்சாத்தீவு ஆகிய இரண்டு உப்பளங்களிலும் நிலக்கண்ணிகள் அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .