Suganthini Ratnam / 2011 ஜூன் 18 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தின் அரிப்புக் கிராமத்தில் காணப்படும் அல்லிராணிக்கோட்டையை பார்வையிடுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் கிராமங்களுள் அரிப்புக் கிராமமும் ஒன்றாகும். இந்;த அரிப்புக் கிராமத்திலேயே பழமை வாய்ந்த அல்லிராணிக்கோட்டை காணப்படுகின்றது.
கடந்த யுத்த காலப்பகுதியில் குறித்த பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. இந்த நிலையில், அல்லிராணிக்கோட்டை என்ற பெயரை மாத்திரமே மக்கள் கேட்டிருப்பார்களேயொழிய, அதனை பார்வையிட முடியாத நிலைமை காணப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது சுமூகமானதொரு சூழ்நிலை நிலவி வருவதால் இந்த அல்லிராணிக்கோட்டையை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அல்லிராணிக்கோட்டை இராவணன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது இந்த அல்லிராணிக்கோட்டை கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றது. இந்த அல்லிராணிக்கோட்டையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்படவில்லையென்பது வருந்தக்கூடிய விடயமாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago