2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 27ஆம் திகதி மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது

இதற்குரிய ஏற்பாடுகளை ஆலய நிருவாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். வன்னி பிரதேசத்தில் புதுமை கொண்ட ஆலயங்களில் இதுவும்  ஒன்றாகும்

பொங்கல் உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முதல் நாளான 26ஆம் திகதி சங்காபிஷேகம் நடைபெறும். இம்முறை ஆலயத்தில் தீ மிதிப்பும் இடம்பெறும். இவ்வாலயத்தில் வன்னி பாரம்பரிய முறைப்படி நள்ளிரவு மடப்பண்டம் எடுத்து வந்து பொங்கல் இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .