Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 18 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை மாலை உண்ணாவிரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக வவுனியா சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
மன்னார் மறை மாவட்ட அதி வண. ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளை இன்று திங்கட்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிளுடன் வவுனியா சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுபெற்று தருவதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
இதேவேளை, வவுனியா வைத்தியாசாலையிலுள்ள அரசியல் கைதியையும் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் பார்வையிட்டார்.
27 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago